
18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியா மற்றும் புலம்பெயர் இந்தியர்களுக்கிடையிலான உறவை கொண்டாடும் வகையிலும், நினைவுகூரும் நாளாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.
மோடி தனது உரையில் புலம்பெயர் இந்தியர்களின் சாதனைகளை பாராட்டியதுடன், இன்னும் பல சாதிக்க வேண்டியதாயுள்ளது என்று வலியுறுத்தினார். உலக அளவில் தொழில்சார் வல்லுநர்களுக்கான தேவை அதிகரிக்கின்ற நிலையில், இந்தியா எப்படி முக்கிய பங்களிப்பு செய்யும் என்பதை அவர் விளக்கினார்.
மாநாட்டில், மலேசியாவும் இந்தியாவும் தங்களுடைய கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டது. குறிப்பாக, இலக்கவியல் துறையில் இணக்கமான செயல்பாடுகள் இரு நாடுகளுக்கும் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று மலேசிய இலக்கவியல் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த மாநாடு புலம்பெயர் இந்தியர்களுக்கு பெருமையையும் உற்சாகத்தையும் வழங்கிய ஒரு முக்கிய தருணமாக இருந்தது. #tazhalmedia