
கோலா லிப்பிஸ், 5 மே: அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பரிபாலன சபா நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் 170 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோயிலில் தற்போது திருப்பணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தில் வரும் மே 11ஆம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆலயம் 1949ஆம் ஆண்டில் மலேசிய அரசாங்கத்தில் 49வது இந்து ஆலயமாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் ஒதுக்கிய சொந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில், பல ஆண்டுகளாக ஹிந்து சமய வழிபாடுகள் மற்றும் சமூக சேவைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
திருப்பணி நிறைவடைந்து, கும்பாபிஷேகத்தின் பின்னர் கோயில் மேலும் ஆன்மீகமான மற்றும் அமைதியான நிலையிலுள்ள பக்தர்கள் திருகோலமாக கண்டு வணங்கும் புனித தலமாக அமைந்துவிடும் என சபை நிர்வாகம் எதிர்பார்த்து வருகிறது.
பக்தர்களும் பொதுமக்களும் இந்த புனித நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.