Tazhal Media – தழல் மீடியா

/ Apr 15, 2025
Latest News
tms

கவர்ந்திழுக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இந்தப் ‘புத்தாண்டு’ ஆஸ்ட்ரோ வழங்குகிறது

கோலாலம்பூர், 11 ஏப்ரல் 2025 –இந்தியச் சமூகத்தினர் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்கும் வேளையில், இந்தப் பண்டிகைக் காலத்தில் புதிய நோக்கங்கள், புதியத் தொடக்கங்கள், புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் உயிர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை ஆகியவற்றை அவர்கள் தழுவுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நேரம். தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உற்சாகமான உள்ளூர் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் இருந்துச் சர்வதேசச் சிறப்பு நிகழ்ச்சிகள் வரை அனைத்து மலேசியர்களையும் ஏப்ரல் 14, 2025 தொடங்கி இப்பண்டிகைக் காலத்தில், மகிழ்விக்க ஆஸ்ட்ரோ தயாராக உள்ளது.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “நம் சமூகத்தில் புத்தாண்டுச் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, மற்றும் இந்தச் சிறப்புமிக்க நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் அன்பானவர்களுடனும் கண்டு மகிழ விரிவான உள்ளூர் மற்றும் சர்வதேச முதல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் அனைத்து தளங்களிலும் முதல் ஒளிபரப்புக் காணும் தொலைக்காட்சித் திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், குடும்ப நாடகத் தொடர்கள், பயணத் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றை எங்களின் நிகழ்ச்சிகளின் வரிசைக் கொண்டுள்ளது. இவ்வேளையில் எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நானும் எனது குழுவும் நன்றி தெரிவிப்பதோடுப் புத்தாண்டுகளைக் கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் – சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள், விஷு ஆஷம்சகள், வைசாக்கி தி லக் லக் வேதாயீ ஹோவி ஜி மற்றும் ஸ்ரீ விசுவாவசு நாம உகாதி சுபகங்ஷலு.”

வாடிக்கையாளர்கள் பின்வரும் உள்ளூர் தமிழ் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டுக் களிக்கலாம்:

  • ஒரு கண்கவர் பயணத் தொடரான, ஊர் சுற்றும் பாய்ஸ், பரவலாக அறியப்படாத இடங்கள்; வரலாற்று இடங்கள்; உள்ளூர் சந்தைகளில் கிடைக்கும் சுவையான உணவு வகைகள், தெரு உணவுக் கடைகள் மற்றும் கலாச்சாரக் கூறுகள் நிறைந்தச் சுவையான உணவுகளைக் கொண்ட உணவகங்கள்; பாராகிளைடிங், வெள்ளை-நீர் ராஃப்டிங், ஸ்நோர்கெல்லிங், நீர் மூழ்குதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நடவடிக்கைகளைச் சித்தறிக்கும். முகேஸ்வரன் சிவனந்தம் இயக்கிய மற்றும் டவியூ புவனன், தியாகு பி, மற்றும் கிறிஸ் ஜெய் ஹரிஷ் உள்ளிட்ட முக்கிய உள்ளூர் திறமையாளர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 14 இரவு 8 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
  • விண்மீன் பிரத்தியேகத் தொடரும் குடும்ப நாடகத் தொடருமானக் ​​கம்பத்து பொண்ணு ஜெய்ஸ்ரீ விஜயன், ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி, பவித்ரா ரெட்டி, கஜேந்திரன், ஷாமினி ஷ்ரதா மற்றும் பலரைத் தாங்கி மலர்கிறது. செல்வமும் சலுகைகளும் நிறைந்த உலகில் மூழ்கிப், புதிதாகக் கிடைத்த அதிர்ஷ்டம் அதன் சவால்களுடன் வருகிறது என்பதைக் கண்டறியும் வறுமையானக் கிராமத்துப் பெண்ணான ஜானுவை இந்தக் கதைச் சித்தறிக்கிறது. சரண் சட் இயக்கியக் கம்பத்து பொண்ணு ஏப்ரல் 14 இரவு 9 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
  • புதுமுக உள்ளூர் திரைப்பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் இயக்கிய, ஒரு பரபரப்பான த்ரில்லர் தொலைக்காட்சித் திரைப்படமான உயிர் போர், பழையப் பதுங்குக் குழியின் அடித்தளத்தில் சிக்கிக்கொண்டப் பிறகு துரதிர்ஷ்டவசமான ஒன்றாக மாறும் நண்பர்கள் குழுவின் வேடிக்கையானப் பயணத்தைச் சித்தரிக்கிறது. மூன் நிலா, ஆரோ சக்ரவர்த்தி, ஸ்ரீ குமரன், புவனன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் பரபரப்பானத் தொலைக்காட்சித் திரைப்படம் ஏப்ரல் 19 இரவு 10 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
  • எக்ஸ் தலைமுறை மற்றும் சட் தலைமுறை இடையேயான வேறுபாடுகளை ஆராயும் அதுவா இதுவா, வேடிக்கையான விளையாட்டு நிகழ்ச்சியில் அருணா ராஜ், சைக்கோமந்த்ரா, ஷாமினி ஷ்ரதா, திவ்யா கியா, டிஷாலெனி ஜாக் மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர். மோகன்தாஸ் மாதவன் இயக்கத்தில் பால கணபதி வில்லியம் தொகுத்து வழங்கும் அதுவா இதுவா ஏப்ரல் 20 இரவு 9 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

சர்வதேச நிகழ்ச்சிகள் முன்னணியில், வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 13 பிற்பகல் 2.30 மணிக்கு ஜீ சினிமா (அலைவரிசை 251)-யிலும், ஏப்ரல் 14 இரவு 9 மணிக்கு கலர்ஸ் ஹிந்தி (அலைவரிசை 116)-யிலும் முதல் ஒளிபரப்புக் காணும் நடகத் த்ரில்லர், சார்ஜென்ட் மற்றும் அதிரடி நகைச்சுவை, அம்பர்சரியா போன்ற இந்தி திரைப்படங்களைக் கண்டு மகிழலாம். அதுமட்டுமின்றி, ஏப்ரல் 14 பிற்பகல் 3 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணும் குற்ற நாடகம், தங்கம் மற்றும் அதிரடி நகைச்சுவை, மலையாளி ஃப்ரம் இந்தியா உள்ளிட்ட மலையாளப் திரைப்படங்களையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். மேலும், வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஏப்ரல் 14 இரவு 9.30 மணிக்கு முதல் ஒளிபரப்பாகும் அதிரடி குற்றவியல், வணங்கான், ஏப்ரல் 15 இரவு 10 மணிக்கு முதல் ஒளிபரப்பாகும் நகைச்சுவை, குடும்பஸ்தன், ஏப்ரல் 16 இரவு 9.30 மணிக்கு முதல் ஒளிபரப்பாகும் சிறை நாடகம், சொர்கவாசல் ஆகியத் தமிழ் திரைப்படங்களையும் கண்டுக் களிக்கலாம்.

ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99*-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my  அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

*விலைகள் வரியை உள்ளடக்கவில்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Scroll to Top