Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

பந்திங் சட்டமன்ற தொகுதியில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு

பந்திங், நவம்பர் 2 – பந்திங் சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் திரளான மக்கள் கலந்து சிறப்பித்தனர். இதில் கோலா லங்காட் மாவட்ட அலுவலர், கோலா லங்காட் நகராண்மைக் கழக செயலாளர், பந்திங் மருத்துவமனை இயக்குநர், சிஜாங்க்காங் தொகுதி ஒருங்கிணைப்பாளர், AMANAH கோலா லங்காட் பிராந்திய தலைவர், கோலா லங்காட் நகராண்மைக் கழக கவுன்சில் உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மலேசிய மக்கள் பன்மை கலாச்சாரத்தைக் குறிப்பிட்டு, “பல சாதிகள், சமயங்கள் மற்றும் மொழிகள் கொண்டே வாழ்வது எவ்வளவு அதிர்ஷ்டமானது. இதனால் அனைத்து திருநாள் விழாக்களையும் ஒன்றாக கொண்டாட முடிகிறது” என சிலாங்கூர் மாநில மனிதவளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினரும் மற்றும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வீ.பாப்பா ராய்டு தமது சிறப்புரையில் தெரிவித்தார்.

மாநில அரசு வழங்கும் நன்மைகள் மற்றும் உதவித் திட்டங்களை குறிப்பிடும் போது, BINGKAS திட்டம் (தகுதியானவர்களுக்கு மாதம் RM300 வழங்கப்படும் 24 மாதங்கள்) மற்றும் Baucar Jom Shopping Perayaan போன்ற பல சமூக நல திட்டங்களை எடுத்துரைத்தேன். விழாவில், பந்திங் மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிறப்பாக விளங்கிய மாணவர்களுக்கு RM200 பரிசளிப்பு வழங்கப்பட்டது. இது அவர்களின் சாதனையை அங்கீகரிக்கும் வகையாகும். மேலும், Program Bantuan Peralatan Usahawan India Selangor (i-SEED) மூலம் RM105,299 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டு, உள்ளூர் இந்திய சமூகத்தின் பொருளாதார சக்தியை மேம்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது என மேலும் குறிப்பிட்டார்.

இத்தகைய விழாக்கள் சமூக ஒற்றுமை, இன அமைதி மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்தும் வாய்ப்பாகும் என்று கூறி, அனைத்து சமூகத்தினரும், நிர்வாக குழுவினரும் மற்றும் தன்னார்வலர்களும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவியமைக்கு வீ.பாப்பா ராய்டு பாராட்டினார்.

-யாழினி வீரா

Scroll to Top