
பாசிர் கூடாங் – தேசிய அளவிலான “தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கோப்பை (16- வயதிற்கு கீழ்)” கால்பந்து போட்டிக்கான தள ஆய்வு மற்றும் திட்டமிடல் கூட்டம் நேற்று பாசிர் கூடாங் நகர மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் MIED – தேசிய விளையாட்டுப் பிரிவுத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட், ஜொகூர் மாநில ம.இ.கா. தலைவரும் ஜோகூர் பாரம்பரிய மற்றும் கலாச்சார ஒற்றுமை துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினரும் JIFA தலைவருமான திரு.ரவீன் குமார் கிருஷ்ணசாமி, MIFA தலைமை தொழில்நுட்ப அலுவலர் மற்றும் துணைத் தலைவர் திரு. மி.ஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது.

இவர்கள் அனைத்து போட்டி குழு உறுப்பினர்களுடனும் இணைந்து, போட்டி நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டு, நிகழ்வை சிறப்பாக நடத்த தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

இந்நிகழ்வில் JIFA துணைத் தலைவர் எண். குணா, MIC தேசிய விளையாட்டு பிரிவு செயலாளர் எண். அர்விந்த் தனபாலன், ஜொகூர் MIC விளையாட்டு பிரிவு தலைவர் எண். தேவதாசன் மற்றும் என். சுப்ரமணியம் ஆகியோரும் பங்கேற்றனர்.
இக்கால்பந்து போட்டி, மிகுந்த எதிர்பார்ப்புடன் திட்டமிடப்பட்டு, தேசிய அளவில் சிறப்பாக நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.
-யாழினி வீரா