
மேற்கு வங்காள மாநில மித்னாபூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண், சிகிச்சையின்போது காலாவதியான குளுக்கோஸ் செலுத்தப்பட்டதால் உயிரிழந்துள்ளார்.
மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்த பின்னர், பெண் சுகப்பிரசவம் மேற்கொண்டார். ஆனால், சிகிச்சையின் ஒரு பகுதியாகக் குளுக்கோஸ் செலுத்தியபோது, அது காலாவதியானதாக இருந்து தீவிர உடல்நலக்குறைவை ஏற்படுத்தியது. இதனால், பெண் நிலைமை மிகவும் மோசமடைந்து இறந்தார்.
இந்த சம்பவத்தால் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை நிர்வாகத்தினரின் நாசுக்கற்ற நடவடிக்கையை கண்டித்த அவர்கள், சிகிச்சை தவறுக்கு நீதிகோரி குரல் கொடுத்தனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதோடு, மருத்துவமனையின் சிகிச்சை முறைகளையும் உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவ சேவைகளின் மீது பலரது நம்பிக்கையை கேள்வி எழுப்பி உள்ளது.