
கோலாலம்பூர், ஏப்ரல் 26 – மலேசிய இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு இசை அனுபவம் காத்திருக்கிறது. அபிள்பிளஸ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து, மிகப் பிரபலமான பாண்டவாஸ் ஃப்யூஷன் பாண்ட் இசைக்குழுவினரின், இசையின் எல்லைகளை தாண்டும் அதிசய நிகழ்ச்சியான “DIVINE FUSION” நிகழ்வை வழங்கவிருகிறது .
பஞ்ச பாண்டவர்கள் கதையை இசை வடிவில் வழங்கவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சி, சாஸ்திரிய ராகங்களை, ஜாஸ், ராக் மற்றும் எலெக்ட்ரானிகா ஆகிய நவீன இசை மரபுகளுடன் இணைக்கும் ஒரு விசித்திரமான பயணமாகும். பாண்டவாஸ் பாண்டின் 13வது ஆண்டு விழாவாகும் இந்நிகழ்ச்சி, கலாச்சாரத்தோடு, இசையின் ஆத்மாவை நேரடியாக உங்கள் உள்ளத்தில் ஊட்டும் வண்ணம் அமையும்.

இந்த நிகழ்ச்சியில் வினோத் (பர்க்கஷனிஸ்ட்), ராம் சிவா (கித்தாரிஸ்ட்), டாக்டர் கிரி (டப்லா), முத்து (மிருதங்கம்), ஜீவன் (பாஸ்), கலை (ஸ்டாரிஸ்ட்), பிரேம் குமார் (வைலினிஸ்ட்), பிரேம் ராஜ் (டிரம்மர்), ஷக்தி (வொக்கலிஸ்ட்), மகேந்திரன் (ஃப்ளூட்டிஸ்ட்) ஆகிய இசை கலைஞர்கள் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்த உள்ளனர்.

📅 நாள்: சனிக்கிழமை, 7 ஜூன் 2025
⏰ நேரம்: மாலை 6.30 மணி
📍 இடம்: ஷாந்தானந்த் அரங்கம், டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், பிரிக்பில்ட்ஸ், கோலாலம்பூர்
டிக்கெட் விலை:
🟠 Platinum – RM100
🟡 Gold – RM70
🔵 Silver – RM50
இந்த இசை யாத்திரையை மிஸ் செய்ய வேண்டாம்! உங்கள் சீட்டுகளை www.myticket.asia இல் உடனே முன்பதிவு செய்யுங்கள்!