
உலக பொருளாதார சூழ்நிலைகளின் சவால்கள் காரணமாக, மலேசியாவின் 2025ம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 3.9% ஆக இருக்கும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. உலக வங்கியின் மலேசியா குறித்த தலைமை பொருளாதார நிபுணர் டாக்டர் அபுர்வா சங்கி, சமூக ஊடகமான X-இல் வெளியிட்ட பதிவில், “அனைத்து சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொண்டு, மலேசியாவின் வளர்ச்சி விகிதம் 3.9% ஆக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
அதேவேளை, ஆசிய நாடுகளுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது: வியட்நாம் 5.8%, பிலிப்பைன்ஸ் 5.3%, இந்தோனேஷியா 4.7%, கம்போடியா 4.0%, தாய்லாந்து 1.6% எனத் திகழ்கின்றன. சீனாவின் வளர்ச்சி விகிதம் 4.0% என கணிக்கப்படுகிறது.
மறுநாளில், மலேசியா தேசிய வங்கி ஆளுநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீட், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் காரணமாக மலேசியாவின் வளர்ச்சி முன்னறிவிப்பு (4.5% – 5.5%) திருத்தப்படலாம் என்றார். மேலும், IMF தனது ஏப்ரல் மாத கணக்கீட்டில், மலேசியாவின் வளர்ச்சி விகிதத்தை 4.1% ஆக குறைத்துள்ளது.