Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

குடிமக்கள் நலனில் வேரூன்றிய வலி – “வயோதிப உதவித் திட்டம்” மீளாய்வு செய்ய PKIPN அமைப்பின் தலைவர் ஜோசப் பிரகாஷ் மனு

Picture: Veera

புத்ராஜாயா, ஜூன் 24: மலேசிய தேசிய நல்லிணக்க நலன்புரி அமைப்பான PKIPN, வயோதிபர்களுக்கான உதவித் திட்டமான Bantuan Warga Emas (BWE) தொடர்பாக மறுபரிசீலனை மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அண்மையில் ஒரு முக்கியமான நினைவுப்பத்திரத்தை சமர்ப்பித்தது.

இந்த மனுவை, PKIPN அமைப்பின் தலைவர் ஜோசப் பிரகாஷ் தலைமையில், பிற்பகல் 3 மணி அளவில் புத்ராஜாயாவில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் பெண்கள், குடும்ப நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நென்சி ஷுக்ரியின் பிரதிநிதிக்கு வழங்கினார்.

RM600 மாத உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் மிகக் கடினமாகவும், சாமான்ய குடிமக்களுக்கு புரியாத காரணங்களால் நிராகரிக்கப்படுகின்றன என்பது முதியோர்கள் மத்தியில் பொதுவான புகாராக நிலவுகிறது. குறிப்பாக, உதவி பெறுவோர் தகுதியைப் பறைக்கும் விதமாக, அவர்கள் பிள்ளைகள் RM3,000–RM5,000 வருமானம் பெறக்கூடாது எனும் நிபந்தனை மிகவும் துன்பத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய வருமானத் தடைகள் தற்போதைய வாழ்க்கைச் செலவுகளுக்கு உகந்ததல்ல என்பதை வலியுறுத்தி, வாழ்க்கையின் மறுமுழுக்க நலத்தை பெற வியாசமான தரப்புக்களை சேர்த்துத் திட்டங்களை மேம்படுத்த சமூக நலத்துறை முன்வரவேண்டும் என PKIPN வலியுறுத்துகிறது.

PKIPN அமைப்பு, மக்களின் நிதி நியாயங்களும், மூப்பின் மரியாதையும் கருத்தில் கொள்ளும் புதிய நடைமுறைகள் விரைவில் அமலுக்கு வர வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top