
நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அல்-நசர் (AL-NASSR) கிளப்புக்கு ஒரு கோலை அடித்து, 2025-ஆம் ஆண்டுக்கான தமது கோல் கணக்கை கிறிஸ்டியானோ ரொனால்டோ துவங்கியுள்ளார். சவூதி லீக் கிண்ணத்தில், அல் அக்டாக் (AL-AKHDOUD) கிளப்புடன் நடைபெற்ற ஆட்டத்தில், அல்-நசர் 3-1 என்ற கோல்கள் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 29 நிமிடத்தில் லிவெர்புல் கிளப்பின் முன்னாள் ஆட்டக்காரர் சாடியோ மனே (Sadio Mane) ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தினார். முதல் பாதி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், ரியல் மாட்ரிட் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புகளின் முன்னாள் ஆட்டக்காரரான 39 வயது ரொனால்டோ 42-வது நிமிடத்தில் கோலை அடித்து இவ்வாண்டுக்கான தமது பருவத்தைத் தொடங்கினார். இவ்வாட்டத்தில் முன்னணி வகித்தாலும் கோல் போடும், முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்ட அல்-நசர், மீண்டும் சாடியோ மனே மூலம் மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்து கொண்டது.