Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

மலேசியாவில் “தர்ம சாஸ்தா” ஆவணப்படம் தொடக்கம்

கோலாலம்பூர், 17 நவ. – அய்யப்ப பக்தியின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் புதிய ஆவணப்படம் தர்ம சாஸ்தா இன்று தனது புனித பயணத்தை தொடங்கியது. வாகை பிச்சர்ஸ் முகிலன் சுப்ரமணி தயாரிப்பில் வீர ராவணன் இந்த ஆவணப்படத்தை பக்தி, மனப்பாங்கு மற்றும் ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக உருவாக்க உள்ளார்.

இந்த ஆவணப்படம் மலேசியா அய்யப்ப பக்தர்களின் ஆன்மீக பயணத்தை விரிவாகக் காட்சிப்படுத்துகிறது. பக்தர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கம், தியாகம், உண்மையான நம்பிக்கை மற்றும் சமூக ஒற்றுமை படத்தின் மையக் கதையாகும். படத்தில், கோயில் விழாக்கள், தர்ம பூஜைகள், யாத்திரைகள் போன்ற நிகழ்வுகள் படக்காட்சிகளாக காட்சியிடப்பட்டு, பக்தர்களின் ஆன்மீக உற்சாகத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன என தழல் மீடியாவிடம் முகிலன் தெரிவித்தார்.

விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கி, முழுமையான ஆவணப்படம் வரையிலான பயணம் மக்களுக்கு பக்தியின் அழகு, சமூக சக்தி மற்றும் ஆன்மீக பயணத்தின் அருமையை உணர வைக்கும். இதன் மூலம் மலேசியா அய்யப்ப பக்தர்களின் வாழ்க்கை, நம்பிக்கை மற்றும் பக்தி கதை அனைவருக்கும் வெளிப்படையாகி, சமூகத்தில் ஒருமைப்பாட்டையும் பக்தி உணர்வையும் உருவாக்கும்.

-யாழினி வீரா

Scroll to Top