
கோலாலம்பூர், 8 ஏப்ரல்: கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற “இஸ்மாயில் ஸைன் இன்டர்மேடியஷன் : கலை மற்றும் அஃஸ்தெடிக்ஸ் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கள்” எனும் புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரையாற்றினார். இதில், அவர் கூறியதாவது: “ஒரு நாட்டின் நேர்மை மற்றும் வளர்ச்சியை நிர்ணயிப்பது, அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வலிமை மட்டும் அல்ல; கலை மற்றும் கலாசார ஊக்கமும் அவசியம்,” என்றார்.
“பொருளாதாரத்தை மட்டும் மேம்படுத்துவது போதாது; அதோடு கலை, கலாசார வளர்ச்சியும் தேவை. மதானி கொள்கையில் பொருளாதார நிலைத்தன்மை முக்கியமானது என்றாலும், நானே மனிதத்வத்தின் அடிப்படையான படைப்பாற்றல், பரிவு மற்றும் நம்பிக்கை ஆகியமையும் நம்முடன் சேர்த்துள்ளேன்,” என அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில், சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங், துணை அமைச்சர் கைருல் பிற்தாஸ் அக்பர் கான், MOTAC பொதுச்செயலாளர் டத்தோ ஷஹருடின் அபு சோஹட், தேசிய காட்சி கலை வளர்ச்சி வாரியத் தலைவர் ஷெய்க் ரிஜால் சுலைமான் மற்றும் இயக்குநர் ஜெனரல் அமேருடின் அகமட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-யாழினி வீரா