Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

லுவோ ஃபுலி-இவர் யாரென்று தெரிகிறதா?

படம் : ஆசியாநெட்

சீனா, 30 ஜனவரி- டீப்சீக் ஏஐ சாட்போட்டுக்கு உலகளவில் கிடைத்துள்ள வெற்றிக்கு பின்னால் 29 வயதான லுவோ ஃபுலி-யின் கடின உழைப்பு மிக முக்கியமானதாக இருந்தது தெரியவந்துள்ளது.

சீனா உருவாக்கியுள்ள டீப்சீக் ஏஐ மாடலுக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் ஏஐ போன்ற முன்னணி சாட்போட்களை பின்னுக்குத் தள்ளி டீப்சீக் சாட்போட் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இது, அமெரிக்க பங்குச் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் பல முன்னணி ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் கணிசமான சரிவுக்கு வழிவகுத்தது.

டீப்சீக் சாட்போட்டின் இந்த அபார வெற்றிக்கு பின்னால் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற திடமான எண்ணம் கொண்ட திறமையான குழு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த குழுவில் உள்ள ஒரு தனித்துவமான உறுப்பினர்தான் லுவோ ஃபுலி. 29 வயதான இவர் ஏஐ தொழில்நுட்பத்தில் தனித்திறமையுடன் மேதையாக விளங்கியுள்ளார்.

லுவோவின் பயணம் பெய்ஜிங்கின் நார்மல் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. ஆரம்பத்தில் கணினி அறிவியல் படிப்பில் தட்டுத்தடுமாரிய அவர் இறுதியில் அப்படிப்பில் சிறந்து விளங்கினார். கடந்த 2019-ல் நடந்த புகழ்பெற்ற ஏசிஎல் மாநாட்டில் எட்டு கட்டுரைகளை வெளியிட்டு பீக்கிங் பல்கலையில் கணக்கீட்டு மொழி இன்ஸ்டிடியூட்டில் இடம்பிடித்தார்.

லுவோ ஃபுலி-யின் அசாத்தியமான திறமை தொழில்நுட்ப ஜாம்பவான்களான அலிபாபா மற்றும் ஷாவ்மி கவனத்தை ஈர்த்தது. அதன்பின்னர் கடந்த 2022-ல் டீப்சீக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அவர் டீப்சீக்-வி2 வடிவாக்கத்தில் இயற்கை மொழி செயலாக்க நிபுணத்துவத்தின் மூலமாக முக்கிய பங்கை வகித்தார். இவர் உருவாக்கிய மாடல்தான் தற்போது சாட்ஜிபிடிக்கு தீவிர போட்டியாளராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top