Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

ஹிஷாமுடின் இடைநீக்கம் குறித்து தீர்மானம் ஏதும் இல்லை – அம்னோ தகவல் தலைவர்

படம்:ஊடகம்

கோலாலம்பூர், ஜூன் 24 – அம்னோவின் முன்னாள் முன்னணி தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மீள்சேர்க்கைக்கான தீர்மானம் ஏதும் வரவில்லை என அம்னோ தகவல் தலைவர் அசலினா ஓத்மான் சையத் தெரிவித்தார்.

பெரிதா ஹரியனிடம் பேசிய அசலினா, “அம்னோவின் ஒவ்வொரு கிளைகளும் தங்கள் வருடாந்திர கூட்டங்களில் விருப்பமான பிரேரணைகளை முன்வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் சட்டப்பூர்வ உரிமை,” என்றார்.

ஆனால் தற்போதைக்கு ஹிஷாமுடின் தொடர்பான எந்தவொரு தீர்மானமும் தலைமை அலுவலகத்துக்கு வரும் நிலை காணப்படவில்லை எனவும், “ஒருவேளை அது நிர்வாக அலுவலகத்தில் பரிசீலனையில் இருக்கலாம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஜொகூர் மாநிலத்தில் உள்ள செம்ப்ராங் அம்னோ கிளை, தனது முன்னாள் தலைவர் ஹிஷாமுடினை மீண்டும் உறுப்பினராக திரும்ப வர வேண்டும் எனக் கோரி ஒரு தீர்மானத்தை ஏற்கக் கூறியுள்ளது. இந்த தீர்மானத்தை அம்னோவின் தேசியத் தலைமைக்கு விரைவில் அனுப்பப்படுவதாக அந்த கிளையின் தலைவர் ஒன் ஹபீஸ் காசி உறுதியளித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரியில் ஹிஷாமுடின் இடைநீக்கம் செய்யப்பட்டபோது, அதற்கான தீர்மானம் அம்னோ அரசியலமைப்பின் பிரிவு 20.9-ஐ அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், கூடுதல் காரணங்கள் வெளியிடப்படவில்லை.

தற்போதும் செம்பாராங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஹிஷாமுடின், தன்னை ஏன் இடைநீக்கம் செய்தனர் என்பது குறித்து தெளிவான தகவல் வழங்கப்படாததால், எந்தவொரு மேல்முறையீடும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

-யாழினி வீரா

Scroll to Top