Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

உலக அளவில் 100 கோடியை கடந்தது ‘குட் பேட் அக்லி’

படம் : தினமணி

கோடம்பாக்கம், 13 ஏப்ரல்- உலகளவில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் வசூல் 100 கோடியை கடந்திருக்கிறது.

ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெறத் தொடங்கியிருக்கிறது. இதனால் படத்தின் வசூல் குறைவின்றி இருக்கிறது. இதனிடையே, உலகளவில் 2 நாட்களில் 100 கோடியை கடந்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’ வசூல். இது அஜித்தின் திரையுலக வாழ்வில், 2 நாட்களில் 100 கோடியைத் தொட்ட முதல் படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

இதன் மூலம் அஜித்தின் திரையுலக வாழ்வில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ப்ரியா பிரகாஷ் வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top