Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மலேசிய நடிகர் ராஜ் கணேஷ் சந்திரகாசனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம்!

Picture : Facebook

சென்னை, 31 ஜனவரி — மலேசிய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் Raaj Tea Palace நிறுவனத்தின் நிறுவனர் ராஜ் கணேஷ் சந்திரகாசன் தனது புதிய படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.

சென்னையில் நடந்த இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியையும், மறக்கமுடியத தருணத்தையும் Raj Ganesh தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படத்தில், இருவரும் ஒருவருக்கொருவர் உற்சாகமாக கைகுலுக்கியிருப்பது காணப்படுகிறது. சாதாரண கியூட் ஸ்டைலில் இருக்கும் ரஜினிகாந்த், எப்போதும் போல சிம்பிளாக, கருப்பு டி-ஷர்ட், வெள்ளை பேண்ட் அணிந்திருக்கிறார்.

இந்த சந்திப்பை ராஜ் கணேஷ் தனது இன்ஸ்டாகிராமிலும் முகநூலிலும் பகிர்ந்து கொண்டு,
“நான் புதிய பயணத்தை தொடங்கும் முன்பு சூப்பர் ஸ்டார் அவர்களின் ஆசி பெறுவது மிகுந்த பெருமையளிக்கிறது. இது எனக்கு மகத்தான ஊக்கமளிக்கிறது,” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மலேசியத் திரைஉலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்ட ராஜ் கணேஷ், ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். Raaj Tea Palace மூலம் மக்களிடம் நெருக்கமாக இருக்கும் அவர், இந்த சந்திப்பு தனது திரைப்பயணத்திற்கு ஒரு நல்வழி என்று நம்புகிறார்.

இந்த அற்புதமான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-வீரா இளங்கோவன்

Scroll to Top