Tazhal Media – தழல் மீடியா

/ Sep 27, 2026
Latest News
tms

“இதயம் தொட்ட கதைகள்” தொடரின் தீம் பாடல் “நட்பு மோட் ஆன்” YouTube-ல் வெளியானது

மலேசிய தமிழ் தொடர் இதயம் தொட்ட கதைகள்-இற்கான தீம் பாடல் “நட்பு மோட் ஆன்” YouTube-ல் வெளியானது. இந்த பாடல் நட்பு, , அன்பு மற்றும் நம்பிக்கையை கொண்டாடும் விதமாக படமாக்காப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர்கள் க்ரிஷ் மற்றும் கூட்வின் கூட்டணியில் இந்த பாடல் உருவாகியுள்ளது. இவர்களுடன் சேர்ந்து கிரீஷ் பாடியுள்ளார். பாடலாசிரியர் ஜியென்ற்ரா வரிகள் எழுதியுள்ளார். இந்த தொடரை இயக்குனர் கோவிந்த் சிங் இயக்கி உள்ளார். பாடல் நண்பர்களிடையேயான உறவுகளை, எப்போதும் நிலைத்த நட்பு மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

இந்த பாடல் மூலம் ரசிகர்கள் #நட்புமோட்ஆன் என ஹாஷ்டேக்குடன் பாடலை அனுபவித்து, நட்பு உறவுகளை கொண்டாடலாம்.

இதயம் தொட்ட கதைகள் தொடரை 28 அக்டோபர், முதல் ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு Vinmeen-இல் பார்க்கலாம். மேலும், இந்த தொடரை Astro Go மற்றும் On Demand வழியாகவும் பார்வையிடலாம்.

Scroll to Top