
பினாங்கு, 28 மே: மலேசியாவில் பிரபல பின்னணி பாடகர் ஹரிஷ் ராகவேந்திராவின் “முதல் கனவே 3.0” என்ற தலைப்பில் சஹானா.மை நிறுவனம் ஏற்பாட்டில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6 மணி அளவில் பினாங்கு The Light Hotel வளாகத்தில் உள்ள Grand Ballroom-இல் நடைபெறுகிறது.
இந்த கச்சேரி ஹரிஷ் ராகவேந்திராவின் ரசிகர்களுக்கு ஒரு இசை பரிசாக அமையவுள்ளது. “முதல் கனவே”, “அன்பே என் அன்பே”, “சக்கரை நிலவே”, மற்றும் “மெல்லினமே” போன்ற அவரது பரிணாமமான ஹிட் பாடல்களுக்கு இந்த நிகழ்ச்சியில் முக்கிய இடம் அளிக்கப்படுகிறது.
நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டுகள் வரிசைப்படி கீழ்கண்ட விலைகளில் வழங்கப்படுகின்றன:
- Melliname – RM130 (Free Seating)
- Sakkarai Nilave – RM199 (Free Seating)
- Anbe En Anbe – RM350 (Free Seating)
- Mudhal Kanave – RM500 (Free Seating)
- Meet and Greet – RM750

இசையையும், ரசிகர்களுடனான நேரடி உறவையும் கொண்டாடும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை மே 30, 2025 முதல் www.greatticket.my தளத்தில் தொடங்கப்படுகின்றது.
தமிழ் இசையை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த இசை விழாவை தவறவிடக்கூடாது. ரசிகர்களுடன் நேரில் சந்திக்க ஹரிஷ் ராகவேந்திராவுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலேசியா முழுவதும் இருந்து ரசிகர்கள் பங்கேற்க எதிர்பார்க்கப்படும் இந்த கச்சேரி, தமிழ் இசை ரசிகர்களுக்கான ஒரு இசை உற்சவமாக அமைவதற்கான அனைத்து கட்டமைப்புகளும் இப்போதே தயாராகியுள்ளன.
-யாழினி வீரா



