Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

KLIA விமான நிலையத்தில் கூரையோர் கசிவு – MAHB உடனடி நடவடிக்கை

Picture : Awani

கோலாலம்பூர்: KLIA வாயிலாக வரும் விமானப் பயணிகள் மற்றும் விமான சேவைகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதில் Malaysia Airports Holdings Berhad (MAHB) முழுப் பொறுப்பும் ஏற்றுள்ளது. இன்று வெளியான தகவலின்படி, KLIA-வின் சில பகுதிகளில் உள்ள மாடிக்கூரை (Roofing) பகுதியில் கசிவு மற்றும் உதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்தின் சில பிரிவுகளில் நீர் சிந்தும் நிலை ஏற்பட்டதாகவும், சீரமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடிக்கூரை கசிவு சம்பவம் இருந்தபோதிலும், விமான நிலையத்தின் வழக்கமான இயக்கங்கள் தடையில்லாமல் நடைபெற MAHB விரைந்து முயன்றுள்ளது. MAHB அதிகாரிகள் ஆய்வு நடத்தி, உடனடி பழுது (rectification) மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பயணிகள் செல்லும் பாதைகள், வசதிகள் மற்றும் விமான இயக்கங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு குழுக்கள் தொடர்ந்து கண்காணிது வருகின்றன.

இந்நிலையில், பயணிகள் மற்றும் விமான சேவைகளில் எந்த சீர்கேடும் இல்லை என்பதை MAHB வலியுறுத்தியுள்ளது. தேவையான அனைத்து தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளும் 24 மணி நேரத்திற்குள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. பயணிகள் வருகை மற்றும் புறப்படும் பகுதிகள் சாதாரணமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் விமான நிலைய கட்டிடத்தின் கட்டுமான வலிமை மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது என்று விமான பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். பயணிகள் வசதி மற்றும் விமான இயக்கத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு KLIA, இந்த நிலைமையிலிருந்து வேகமாக மீள்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

Scroll to Top