
PICTURE ;AWANI
20 மே 2025 ;மலேசியாவில் 2020 முதல் 2024 வரை, மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையிலான மோதல்கள் தொடர்பாக 66,825 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை குரங்கு, காட்டு யானை, காட்டு பன்றி, மலாய் புலி மற்றும் டேப்பிர் போன்ற விலங்குகளை உள்ளடக்கியதாகும். இந்த மோதல்களால் சுமார் RM46.5 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன .
ஜொகூர் மாநிலம் மட்டும் 7,996 புகார்கள் மற்றும் RM6.88 மில்லியன் இழப்புகளை பதிவுசெய்துள்ளது. மனிதர்-யானை மோதல்கள் அதிகமாகவும், மனித உயிர்கள் மற்றும் சொத்துகளுக்கு நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்துவதால், இது முக்கிய கவனத்துக்குரிய பிரச்சினையாக உள்ளது .
இந்த பிரச்சினையை சமாளிக்க, மலேசிய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில், யானைகளின் இயக்கங்களை கண்காணிக்க செயற்கைக்கோள் காலர்களை பயன்படுத்துதல், கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் மின்கம்பிகளை நிறுவுதல், மற்றும் யானைகளுக்கான உணவுத்தொகுப்புகளை உருவாக்குதல் போன்றவை அடங்கும். 2024 ஆம் ஆண்டில், மனிதர்-விலங்கு மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக RM10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது .
மேலும், ‘Ecological Fiscal Transfer’ (EFT) திட்டத்தின் கீழ், நிலத்திலும் கடலிலும் 300,000 ஹெக்டேர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 90,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் 14,000 ஹெக்டேர் நிலம் நிரந்தர காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது
–முல்லை மலர் பொன் மலர் சோழன்



