Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

ரி.ம.25 மில்லியன் சிகாரியில் 7 லட்சம் கிலோ கனிமப் பொருட்கள் பறிமுதல்

மஞ்சோங், 7 நவ. – சிகாரி பகுதியில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 7 லட்சம் கிலோ கனிமப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரி.ம.25 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பேராக் மாநில சுரங்க மற்றும் நிலத்துறை அதிகாரிகள் நடத்திய ஒருங்கிணைந்த சோதனையின் போது, உரிய அனுமதியின்றி சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட குழுவின் மறைவிடத்தில் இந்த கனிமப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின் போது அதிகாரிகள் பல்வேறு வகையான தாது, மண் மற்றும் மதிப்புள்ள கனிமப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பேராக் மாநில தலைமை சுரங்க அதிகாரி தெரிவித்ததாவது, “சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் மாநிலத்தின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கக்கூடியவை. இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடும் எந்த நிறுவனத்துக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

தற்போது சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடந்து வருவதாகவும், சம்பந்தப்பட்டோர் மீது சுரங்க மற்றும் கனிமச் சட்டம் 1994ன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top