Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

மலேசிய பொருளாதார மாநாட்டில் டத்தோ டாக்டர் ரவி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

கோலாலம்பூர், 26 ஜூன்: மலேசிய பொருளாதார மன்றம் (Malaysia Economic Forum – MEF) 2025 இன் சிறப்புக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்த முக்கிய நபர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த விருதுப் பிரிவில், ஆசியாவின் வர்த்தகத் துறையில் தன்னிகரற்ற பங்களிப்புக்காக, Tasly Marketing (Malaysia) Sdn Bhd நிறுவன இயக்குநரான டத்தோ டாக்டர் ரவி பக்கிரிசாமி அவர்கள் Asia Business Icon Lifetime Achievement Award விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேடையில் நடைபெற்ற சிறப்புமிக்க விருது வழங்கும் நிகழ்வில், அரசாங்கம், வணிகம் மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முக்கியமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Navigating the Future: Pioneering Economic Resilience and Green Prosperity” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டை KSI Strategic Institute for Asia Pacific மற்றும் Economic Club of Kuala Lumpur (ECKL) ஆகியவை இணைந்து நடத்தின.

மாநாட்டில் உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் சூழலில் மலேசியாவின் நிலைத்தன்மை மற்றும் பசுமை வளத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்தும், எதிர்கால வளர்ச்சி பாதைகள் குறித்தும் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன.

விருது பெற்ற டத்தோ டாக்டர் ரவி பகிரிசாமி அவர்கள், மலேசியாவில் இந்திய சமூகத்தின் வர்த்தக முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தவர் என பொதுமக்களிடையே பாராட்டு பெருகிறார்.

இந்த வெற்றி, இனவொன்றுபட்ட சமூகத்திற்கான ஊக்கமாக இருக்கும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.

-யாழினி வீரா

Scroll to Top