
கோலாலம்பூர், மலேசியாவின் ஐந்தாவது பிரதமராக பணியாற்றிய துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் மறைவுக்கு பகாங் சுல்தான் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மட் ஷா மற்றும் தெங்கு அம்புவான் பகாங் தெங்கு அசிசா அமினா மைமூனா இஸ்கந்தரியா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அப்துல்லா படாவியின் ஆன்மா அல்லாஹ்வின் அன்பும் அருளும் பெற்ற சாலிஹ் மக்களின் கூட்டத்தில் நிலை பெற வேண்டும் என இருவரும் பிரார்த்தனை செய்தனர்.
அத்துடன், அவரது குடும்பத்தினர் இந்த இழப்பை சகிப்பதற்கும், அனைத்து நடவடிக்கைகளும் எளிதாக நடைபெறவும் இறைவன் அருள் புரியட்டும் எனவும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்தனர்.
“நாட்டின் முன்னேற்றத்திற்காக அப்துல்லா படாவி அளித்த ஒவ்வொரு பங்களிப்பும் நெஞ்சில் நிறைந்த நினைவாக எப்போதும் நிலைத்திருக்கும்,” என பகாங் அரண்மனை நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
அப்துல்லா படாவி, மக்கள் மனதில் பக் லா என அழைக்கப்பட்டவர், இன்று மாலை 7.10 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய மருத்துவமனையில் உயிர் நீத்தார்.