
படம் : பெர்னாமா
கிள்ளான், 22 பிப்ரவரி – இன்று அதிகாலை பொழுதில் மேரு சந்தை வளாகத்தில் நடந்த அமலாக்க நடவடிக்கையின் போது, குடியேற்றத் துறையினரால் கைது செய்யப்படுவோம் என்று பயந்து, ஒரு சில வெளிநாட்டினர் தப்பிக்க எத்தனித்தனர். அதிகாலை சுமார் 5.30 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில், சில வெளிநாட்டினர் துர்நாற்றம் வீசும் குறுகிய கால்வாயில் ஒளிந்து கொள்ள ஊர்ந்து சென்றதையும், சிலர் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க கடைகளின் கூரைகளில் ஏறியதையும் கண்டதாக குடிநுழைவுத்துறை துணை இயக்குநர் ஜாஃப்ரி எம்போக் தாஹா கூறினார். இது தொடர்பான காணொலி இன்ஸ்டகிராம் வலைதளத்திலும் பகிரப்பட்டு வந்தது.
இந்த அதிரடி சோதனையில் 628 வெளிநாட்டினரில் 17 முதல் 57 வயதுடைய 598 பேர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை துணை இயக்குநர் கூறினார்.
-ஶ்ரீஷா கங்காதரன்