Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

மாணவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை – பிரதமர் அன்வார்

Picture : Awani

கோலாலம்பூர், அக்டோபர் 14 – மாணவர்களின் சமூக ஊடக (Social Media) பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நோக்கில் விரைவில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவுள்ளது என்று பிரதமர் ‘Datuk Seri Anwar Ibrahim’ தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, இன்றைய காலத்தில் சமூக ஊடகங்கள் மாணவர்களின் பழக்கவழக்கத்திலும், ஒழுக்கத்திலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றன. இதனால், கல்வி அமைச்சு மற்றும் தொடர்பு அமைச்சு இணைந்து புதிய வழிமுறைகள் மற்றும் கொள்கைகள் உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அன்வார் கூறினார், சமூக ஊடகங்கள் அறிவை பகிரும் தளமாக இருக்க வேண்டும்; ஆனால் அதனை தவறாக பயன்படுத்துவது மாணவர்களின் மனநிலைக்கும் கல்விக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க உள்ளது,” என்றார்.

அமைச்சரவை கூட்டத்தில், மாணவர்கள் பயன்படுத்தும் TikTok, Instagram, dan X (Twitter) போன்ற தளங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகள் விவாதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகமும் இணைந்து மாணவர்களை சமூக ஊடகப் பயன்பாட்டில் வழிநடத்த வேண்டும் என்றார். “இது அரசு மட்டுமின்றி, அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பாகும்,” என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறினார், சமூக ஊடகங்கள் கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், மாணவர்களின் மனநலத்தையும் பாதுகாக்க சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த முயற்சிகள் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

Scroll to Top