Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

சசிகுமார், சத்யராஜ் கூட்டணி

படம் : இணையம்

சென்னை, 1 மார்ச்- இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் அடுத்த படத்தை இரா.சரவணனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எம்.குரு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இதில் பரத், சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் மேகா செட்டி, மாளவிகா கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கின்றனர்.

எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ரகுநந்தன் இசை அமைக்கிறார். ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி தயாரிக்கிறார். விஜயகுமார் இணை தயாரிப்பு செய்கிறார். குடும்ப உறவுகளின் வலிமையை உணர்த்தும் ஜனரஞ்சகமான படமாக உருவாகும். மார்ச் 10-ஆம் திகதி இதன் படப்பிடிப்பு பட்டுக்கோட்டையில் தொடங்குகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top