
கோலாலம்பூர், மே 1: 2025 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், மலேசியா முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
“பெகேர்ஜா கெசுமா பங்க்சா” எனும் இவ்வாண்டின் கருபோருளுக்கு ஏற்ப, நாட்டின் வளர்ச்சிக்கு உயிரணுவாக செயற்படும் தொழிலாளர்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதையைக் காட்டுவதாக அவர் கூறினார். தொழிலாளர்கள் “மதானி” மலேசியாவிற்கு தூண்களாகவும், முன்னோடிகளாகவும் உள்ளனர் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“உங்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் என்றும் பாராட்டப்பட வேண்டும். இது எதிர்காலத் தலைமுறைகளுக்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும்” என அவர் கூறினார்.
இந்நாள் தொழிலாளர்களின் உரிமை, நலன் மற்றும் நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தும் ஒரு முக்கிய நாளாக இருக்கிறது. தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும் என்றும், அவர்கள் நமது சமூகத்தின் நெஞ்சழுத்தாகத் திகழ்வதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
-வீரா இளங்கோவன்