
நான்கு குழந்தைகளின் அன்புமிகு தாயாக இருந்த தெய்ஸி மோர்கன், வாழ்க்கையின் சவால்களை எதுவாகவும் கருதாமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றியடைய முயன்றவர். திருமணத்திலிருந்து வெளியேறியபோது, அவர் ஏதுமின்றி இருந்தாலும், மனப்பூர்வமான உறுதியும், தன்னம்பிக்கையும் மட்டுமே உடன் இருந்தன. உலகிற்கு தன் மதிப்பை நிரூபிக்கத் தயாரான அவர், தனது வாழ்க்கையில் மறுபடியும் புதிய தொடக்கத்தை உருவாக்கினார்.
தெய்ஸியின் வாழ்க்கை முக்கிய திருப்புமுனையை எட்டியது, மலேசியாவில் இரண்டு சிறுமிகளை தத்தெடுத்தபோது. அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் வழங்க விரும்பிய தெய்ஸி, மலேசியா குடிபெயர்ந்து, அவர்களின் சட்டப் பதிவை முழுமையாக முடிக்கத் தீர்மானித்தார். இது அவரின் அன்பும், பொறுப்புணர்வும் நிரம்பிய மனப்பாங்கை வெளிப்படுத்தியது.




தெய்ஸி எவ்வளவு கடினமான சூழ்நிலைகளிலும் பின்னடைவை ஏற்க மறுத்தவர். 2022-ஆம் ஆண்டு, “9Skin” என்ற பிரபல அழகு மற்றும் தோல் பராமரிப்பு நிறுவனத்தை மலேசியாவில் தொடங்கினார். இது தொழில்முனைவுத் துறையில் அவர் மீண்டும் வலுவாக நுழைய உதவியது. வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள், 2025-ஆம் ஆண்டு, “ஹுக்கும்” என்ற பிராண்டை ஆசியாவில் அறிமுகப்படுத்தி, மேலும் ஒரு முக்கிய சாதனையைப் பதிவு செய்தார்.

வியக்கத்தக்க வகையில், இந்த புதிய முயற்சி தெய்ஸியை உலகளவில் புகழ்பெற்ற ஒரு பிரபல தொழில்முனைவோராக உருவாக்கியது. அதோடு, ஆண்டின் தொடக்கத்தை மிக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி, மலேசியா மட்டுமல்லாது உலகையே ஆச்சரியமடைய செய்தார். மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, அவரின் நிர்வாகத் திறனையும், மக்களை ஈர்க்கும் ஆற்றலையும் வெளிப்படுத்தியது.

தெய்ஸியின் எண்ணப்போக்கு எப்போதும் முன்னோக்கி தான். “வெற்றி அடைய பாலினமும், வயதும் ஒரு தடையாக இருக்கக்கூடாது” என்ற நம்பிக்கையில், அவர் தன்னுடைய நிறுவனம் முழுவதுமாக பெண்கள் கொண்ட ஒரு குழுவினால் இயக்கப்படும் வகையில் அமைத்தார். மேலும், 13 வயது சிறுவனை பணியமர்த்தி, திறமைக்கு எந்தவிதமான வரம்புகளும் இல்லையென்று நிரூபித்தார்.

தெய்ஸியின் பயணம் இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக உள்ளது. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால், எந்த சாதனையும் சாத்தியமே என்பதை அவர் தனது வாழ்க்கையிலேயே நிரூபித்துள்ளார். உங்கள் கனவுகளை நம்புங்கள், உழைப்புடன் தொடருங்கள் – வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது! தெய்ஸி மோர்கன் அவர்களுக்கு தழல் மீடியா சார்பாக வாழ்த்துகிறோம்!
-வீரா இளங்கோவன்