
படம் : இணையத்தளம்
காபுல், 3 பிப்ரவரி- ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.58 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.34 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.01 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த 30ம் தேதி ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-ஶ்ரீஷா கங்காதரன்