
ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் பல்வேறு திரைப்படங்களும் வெப் தொடர்களும் காத்திருக்கின்றன.
முதலில், ‘இந்திரா’ திரைப்படம் செப்டம்பர் 19 அன்று வெளியாகிறது. வசந்த் ரவி நடிப்பில் உருவான இப்படத்தை சபரிஸ் நந்தா இயக்கியுள்ளார். இதில் கல்யாண், சுனில், மெஹ்ரீன் பிர்சாதா, அனிகா சுரேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அடுத்து, ‘ஹவுஸ் மேட்ஸ்’ எனும் ஹாரர்-காமெடி திரைப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதேபோல், ‘போலீஸ் போலீஸ்’ எனும் இணையத் தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. மிர்ச்சி செந்திலும், ஜெயசீலன் தங்கவேலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஷபானா, சுஜிதா, வின்செண்ட் ராய், சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும், ‘ஷ்ஷ்ஷ்’ வெப் தொடரின் இரண்டாம் பாகம் நாளை வெளிவருகிறது. இதில் நடிகை இனியா, சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதற்குபின், கடந்த வாரம் வெளிவந்த படங்களில், ‘பட்டர் ஜாம்’ அமேசான் பிரைமில், ‘மீஷா’ ஆஹா தமிழ் மற்றும் சன் நெக்ஸ்டில், ‘கூலி’ படம் அமேசான் பிரைமில் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகிக் கொண்டிருக்கின்றன.
ரசிகர்களுக்காக பல்வேறு வகை படைப்புகள் காத்திருக்கின்றன என்பதால், இந்த வாரம் ஓடிடி தளங்களில் முழு பொழுதுபோக்கு அனுபவம் கிடைக்க உள்ளது.
-ஸ்ரீ


