Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

சஞ்சய் ராம் என்ற சிறுவனின் உயிரைக் காப்பாற்ற நம்மின் உதவி தேவை!

கோலாலம்பூர், 4 நவ. –
மட்டும் 14 வயதான சஞ்சய் ராம் என்ற சிறுவனின் வாழ்க்கை இன்று உயிர்–மரணம் இடையே தத்தளிக்கிறது. மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் கனவு – ஒருநாள் போலீஸ் ஆகி சமூகத்துக்குச் சேவை செய்வது. ஆனால் தற்போது அவனின் உடலில் பரவியுள்ள கடுமையான எலும்பு புற்றுநோய் (Ewing Sarcoma) அந்த கனவையே மங்கச் செய்துவிட்டது.

ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட காய்ச்சல் சாதாரணமானது என நினைத்த பெற்றோர், சிறிய மருந்தகத்தில் இருந்து மருந்து வாங்கி சிகிச்சை செய்தனர். ஆனால் நிலை மோசமடைந்து, மருத்துவ பரிசோதனையில் அரிதான எலும்பு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சஞ்சயின் உடலில் வலி பெருகி, நடப்பதற்கே முடியாத நிலை ஏற்பட்டது.

பாமர குடும்பமாக வாழும் பெற்றோர் தங்களின் பொருட்களை விற்று, கடன் வாங்கி, உணவையும் தவிர்த்து முதல்கட்ட சிகிச்சைக்கு செலவு செய்தனர். ஆனால், தற்போது அவர்களிடம் எதுவும் இல்லை. மருத்துவர்கள் கூறியபடி, சஞ்சயின் தொடர்ச்சியான கீமோத்தெரபி சிகிச்சைக்கு ரி.ம. 50,000 வரை தேவைப்படுகிறது.

சஞ்சயின் தாய் கண்ணீர் மல்க, “எங்களின் மகன் ஒருநாள் போலீஸ் ஆகப் போகிறார் என்று நம்பியிருந்தோம். இப்போது அவர் உயிர் தப்ப வேண்டும் என்பதற்கே பிரார்த்திக்கிறோம்,” எனக் கூறினார்.

இந்நிலையில், Children Cancer Association Malaysia (CCAM) வழியாக Give.Asia தளம் மூலம் நிதி திரட்டம் நடைபெறுகிறது. சிறுவன் சஞ்சய் மீண்டும் சிரிக்க, வாழ, அவனின் கனவை நனவாக்க நம்மால் இயன்ற அளவு உதவி செய்யலாம்.

உதவி செய்ய விரும்புபவர்கள் இந்த லிங்க் க்ளிக் செய்யவும்: https://give.asia/campaign/help-sanjay-fight-rare-cancer?#/story

–யாழினி வீரா

Scroll to Top