
படம் : கூகுள்
மலேசியா, 4 பிப்ரவரி- தைப்பூசத்தின் போது முருகனுக்கு ஏந்தும் இந்து காவடி நடனத்தை கேலி செய்யும் சர்ச்சைக்குரிய வீடியோவிற்காக எரா எஃப்எம்மின் 3-பகுதி எரா நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
எரா எஃப்எம் நிலையத்தின் சமூக ஊடக தளங்களில் இருந்து இப்போது நீக்கப்பட்டுள்ள அந்த காணொலியில், தொகுப்பாளர்கள் காவடி நடனத்தைப் பின்பற்றி சிரித்துக்கொண்டே “வேல் வேல்” என்று கோஷமிடுவதைக் காட்டியது.
எரா எஃப்எம்மின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு பதிவில், நபில் அகமது, ஆசாத் ஜாஸ்மின் மற்றும் ராடின் அமீர் எபெண்டி அகமது அருவானி ஆகியோர் இந்த காணொலிக்கு மன்னிப்பு கோரியுள்ளனர். இது குறிப்பாக இந்திய சமூகத்தை நோக்கி பேசியது தவறு என்றும் ஒப்புக்கொண்டனர். இவர்களின் செயலை எண்ணி வருந்திய பதில் காணொலி பலரால் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
மஇகா துணைத் தலைவரும் தாபா நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சரவணன், எம். சரவணன் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அந்த நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த காணொளி தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் கூறினார்.
-ஶ்ரீஷா கங்காதரன்