Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

‘PM Anwar’,Israel நடவடிக்கையை கண்டித்தார் – ‘Global Sumud Flotilla’ கப்பலை தடுத்து நிறுத்தியது குறித்து.

PUTRAJAYA: ‘Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim’ , காசாவுக்கு மனிதாபிமான உதவி கொண்டு சென்ற Global Sumud Flotilla (GSF) கப்பல்களை ‘Israel’ படை தடுத்ததை கடுமையாக கண்டித்தார். அவர் இதை மனித உரிமை மீறலும், பொது செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தலும் எனக் குறிப்பிட்டார்.

‘Anwar“ இந்த கப்பல்கள் அத்தியாவசிய உதவிகள் மற்றும் ஆயுதமற்ற பங்கேற்பாளர்களை மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் ‘Israel’ கடற்படை மிரட்டலும் வலுக்கட்டாயமும் காட்டியது,” என்றார்.

மேலும், மலேசியர்களின் பாதுகாப்பும் மரியாதையும் ஆபத்துக்குள்ளான நிலையில், மலேசியா சட்டப்பூர்வ மற்றும் தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி ‘Israel-லை பொறுப்புக்கூறச் செய்வோம் என்று அவர் உறுதியளித்தார்.

Palestin மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளவரை, மலேசியா அவர்கள் பக்கம் உறுதியாக நிற்கும். பல தலைமுறைகளாக நீடித்து வரும் அநீதி, அடக்குமுறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்,” என ‘Anwar’ வலியுறுத்தினார்.

இந்த GSF முயற்சியில் 44 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மலேசியர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ‘Greta Thunberg, Nelson Mandela’ பேரன் ‘Mandla Mandela’ உள்ளிட்டோரும் இருந்தனர். ”Israel-லின் நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Scroll to Top