
படம் : கூகுள்
சென்னை, 3 பிப்ரவரி- நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் சென்னையில் இடம்பெற்று 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் 30 சதவீத படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் முடிக்க படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்கான படப்பிடிப்பை ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை ஆகிய பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படம் கோடை விடுமுறை முன்னிட்டு மே மாதம் வெளியாகும் என தகவல்கள் பரவி வந்தநிலையில், தற்போது ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தயாரிப்பு நிறுவனம் கூலி திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.
-ஶ்ரீஷா கங்காதரன்