
கோலாலம்பூர், 4 பிப்ரவரி — தைப்பூச விழாவை முன்னிட்டு KTM Komuter ரயில் மற்றும் பல்வேறு நகரங்களில் இலவச பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பொதுமக்கள் KTM Komuter சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம். இதன்மூலம் சுமார் 5 லட்சம் பயணிகள் இந்த வசதியின் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிப்ரவரி 9 முதல் 12ஆம் தேதி வரை, இடைவிடாத ரயில் சேவையும் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்துக்களின் திருவிழா ஏற்பாடுகளுக்காகவும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இரயில் சேவைக்கு கூடுதலாக, பிராசாரானா மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாசார் செனி, கோம்பாக், கம்போங் பாரு MRT நிலையங்களில் இருந்து இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும்.
பிப்ரவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில், பினாங்கு மாநிலத்திலும் இலவச பேருந்து சேவைகள் செயல்படுத்தப்படும், என லோக் கூறினார்.
தைப்பூச திருவிழாவை சந்தோஷமாக, எளிதாக கொண்டாட இந்த இலவச போக்குவரத்து சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அந்தோனி லோக் கேட்டுக்கொண்டார்.
-வீரா இளங்கோவன்