Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மலேசியாவில் வெற்றி நடைப்போடும் விஷால் நடித்த “மதகஜராஜா”

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் நடித்த “மதகஜராஜா” திரைப்படம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மலேசியாவில், எம்எஸ்கே சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தியேட்டர்களில் வெளியிட்டது. ரிலீசான 8 நாட்களில், மலேசியாவில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

12 ஆண்டுகள் பிறகு வெளியாகியுள்ள இப்படம், இயக்குனர் சுந்தர் சி.வின் பிரமாணத்தை மலேசிய ரசிகர்கள் கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் திரையரங்குகளை நோக்கி செல்ல வைத்துள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கும் சுந்தர் சி., கதை, நகைச்சுவை மற்றும் குடும்பமக்களின் ரசனையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்று விட்டார்.

எம்எஸ்கே சினிமாஸ் நிர்வாகி சாரதா சிவலிங்கம் தெரிவித்ததாவது, “மலேசிய ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். படம் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது,” என்று கூறினார்.

இப்படம் தமிழ்நாட்டிலும் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை ரூ.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மிக விரைவில் ரூ.50 கோடி வசூல் சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டில் வெறும் ரூ.15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், தற்போதுவரை அதன் மூன்று மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது. இது படக்குழுவிற்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.

Scroll to Top