
‘பிக் பாஸ் போட்டியில் தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றை முத்துக்குமரன் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் – சீசன் 8’ நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது. இதில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். பிக் பாஸ் வெற்றியைத் தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பிக் பாஸ் வெற்றிக் கோப்பையுடன் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவரும் சேர்ந்து இந்த வெற்றிக் கோப்பையை என் கையில் தூக்கி கொடுத்திருக்கிறீர்கள். ரொம்ப கனமாக இருக்கிறது. அவ்வளவு அன்பு. உள்ளே நண்பர்கள் வரும்போது வெளியே உங்களுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு என்று சொன்னார்கள். அப்போது எல்லாம் நம்பவில்லை. ஆனால், வெளியே வந்து பார்க்கும்போது அவ்வளவு வியப்பாக இருக்கிறது. பிக் பாஸ் டைட்டில் வென்ற முத்துக்குமரனுக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஶ்ரீஷா கங்காதரன்