Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

«அவர்களை உடனடியாக விடுவியுங்கள்! மலேசியச் செயற்பாளர்களுக்காக நாம் சிறந்ததைச் செய்வோம்» – ‘PM Anwar’

Picture : Awani

சமீபத்தில்t ‘Gaza’ நோக்கிச் சென்ற ‘ Global Samud Flotilla ‘ கப்பலில் இருந்த மலேசிய செயற்பாட்டாளர்கள் ‘Israel’பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து ‘Perdana Menteri, Datuk Seri Anwar Ibrahim’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “அவர்களை உடனடியாக விடுவியுங்கள்! மலேசிய செயற்பாட்டாளர்களுக்காக சிறந்ததைச் செய்வோம்” எனத் தன்னுடைய அறிக்கையில் உறுதியளித்தார்.

இந்த செயற்பாட்டாளர்கள், ‘Palestin’, மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், ‘Israel’ படைகள் கப்பலைத் தடுத்து நிறுத்தியதால், உலகளவில் பலரும் கவலை வெளிப்படுத்தி வருகின்றனர். ‘PM Anwar’, மலேசியா தனது குடிமக்களின் பாதுகாப்பிற்காக அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு, மனிதாபிமான மதிப்புகளை மதித்து, செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். “இது வெறும் மலேசியர்களுக்காக மட்டுமல்ல, உலகளாவிய மனிதாபிமானக் கடமையை நிறைவேற்றும் அனைவருக்கும் உரிய நீதி” என ‘ PM Anwar’ குறிப்பிட்டார்.

இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்ட தூதரகங்களும் இடைவிடாது தொடர்பில் இருந்து, அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மலேசியா எப்போதும் அமைதி, நீதி மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளில் உறுதியுடன் இருப்பதாகவும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

Scroll to Top