
கோத்தா பாரு, 9 ஏப்ரல்: நோன்பு பெருநாள் 2025-ஐ முன்னிட்டு மார்ச் 24 முதல் இன்று வரை நடைபெற்ற சோதனை நடவடிக்கையில், கிளந்தான் சாலை போக்குவரத்து துறை (RTD) மொத்தம் 2,941 சமன்களை விதித்துள்ளது.
கிளந்தான் சாலை போக்குவரத்து துறை இயக்குநர் மொஹ்த் மிசுவாரி அப்துல்லா கூறும்போது, “மொத்தம் 1,759 வாகனங்கள் பல்வேறு தவறுகளுக்காக நடவடிக்கைக்கு உள்ளாகின. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும். கடந்த ஆண்டு 10,639 சமன்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 8,370 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன, ஆனால் கடந்த ஆண்டு 31,917 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டிருந்தன,” என்றார்.
மிசுவாரி கூறுகையில், முக்கிய குற்றங்களில் வேகக்கட்டுப்பாடுகளை மீறுதல், போக்குவரத்து சிக்னல்களுக்கு கீழ்படாமை, இரட்டை கோட்டில் ஓவர் டேக் செய்தல், அவசர வழிகளில் செலுத்தல், மோசமான ஓட்டமிடுதல், வரிசை மீறல், கைபேசியை பயன்படுத்தல் போன்றவை அடங்கும்.
“402 வழக்குகள் காலாவதியான வாகன உரிமக் கடிதம் (LKM) குறித்தவையாக உள்ளன” என்றார் அவர்.
-யாழினி வீரா