Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

மலேசிய மாணவர்கள் ‘ROACH AWAY BUG SHIELD!” திட்டத்துக்காக சர்வதேச போட்டியில் தங்கம் வென்றனர்!

Picture: Vasanth

சிரம்பான், 23 மே: செண்டாயானில் உள்ள SJKT Bandar Sri Sendayan தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள், I³C 2025 – 3வது சர்வதேச புதுமை மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில், தங்களது ஆராய்ச்சி திட்டமான “Roach Away Bug Shield!: Cockroach Repellent Spray” மூலம் தங்க பதக்கம் வென்று அனைத்து மக்களையும் பெருமைப்பட வைத்துள்ளனர்!

இந்த திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள்:

Laelle Lourdes Amaran

Joashlyn James

Mithira A/P Loganathan

Hariecharan A/L Vishnu

Vasanth Abhinandan A/L Vasantha Kumaran

இவர்கள் தங்கள் கற்பனையும், அறிவியலும் சேர்த்து உருவாக்கிய இந்த பூச்சிக்கொல்லி தெளிவுத் தயாரிப்பு, பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்பதால் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது.

இந்த போட்டி மலேசியாவில் 2025 மார்ச் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
Pusat Sains Negara, MICA, மற்றும் ASWARA ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.

இந்த வெற்றியை ஒரு சாதனை மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழ்ப் பள்ளி மாணவனும்/மாணவியும்க் கரங்களைக் கூப்பி வாழ்த்தத் தக்க ஒரு உந்துசக்தியாக பார்க்கலாம்.

📢 பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தையும் அறிவையும் வளர்க்க ஊக்கம் அளியுங்கள்.
📚 மாணவர்களே! உங்கள் கனவுகள் பெரியவை, உங்கள் திறமைகள் உலகிற்கு தெரியும் நாள் இது போலவே வரும்!

தமிழும் அறிவும் சேரும் போது, உலகமே வென்றிடலாம்! 🌍✨

-யாழினி வீரா

Scroll to Top