
சைபர்ஜாயா, 25 ஜூன்: ஒரு உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 20 வயது மாணவி ஒருவர், செவ்வாய்க்கிழமை காலை சைபர்ஜாயாவில் உள்ள தனது குடியிருப்பில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது கொலை வழக்காக போலீசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவிப் கமிஷனர் நூர்ஹிசாம் பஹமான் தெரிவித்ததாவது, “மரணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வீட்டில் யாரும் புகுந்ததற்கான எந்த சாட்சியங்களும் காணப்படவில்லை,” என்றார்.
முன்னிலை ஆய்வில் மாணவியின் தலை பகுதியில் பலபான காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பின் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக செர்டாங் பொது மருத்துவமனைக்கு அனுப்பி விடப்பட்டது. மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பான எவ்வித சாட்சியங்களும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சில செய்தித்தளங்களில் வெளியான பாலியல் வன்முறை குறித்த தகவல்கள் தவறானவை என நூர்ஹிசாம் கண்டித்தார்.
இந்த வழக்கு தற்போது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் கீழ் கொலைக் குற்றமாக விசாரிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி ASP மொக்ட் ஹுஸ்னி ஹுஸைனை 012-9307860 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம்.
பொதுமக்கள் அமைதியாக இருந்து, தவறான தகவல்களை பரப்பாமல் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் கேட்டுள்ளனர்.
-வீரா இளங்கோவன்



