
கோலாலம்பூர், 5 மார்ச் — தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வி (TVET) இனி இரண்டாம் தர கல்வி வழியல்ல, மாறாக மலேசிய தொழிலாளர்களை போட்டித் திறனுடன் உருவாக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தளம் என யாயாசான் மகீர் அறக்கட்டளை (Yayasan Mahir Malaysia) தலைவர் டத்தோ ஸ்ரீ கணேஸ் பழனியப்பன் தெரிவித்தார்.
அண்மையில் பினாங்கு, பேராயில் உள்ள தொழில் பயிற்சி நிறுவனத்தில் (ILP) Siemens டிஜிட்டல் தொழில் பயிற்சி அகாடமி தொடக்கவிழாவில், இதனை அவர் கூறினார்.
“TVET, சாதாரண கல்வியில் அதிக ஆர்வம் இல்லாத மாணவர்களுக்கேற்ற தொழில்நுட்ப மற்றும் நடைமுறை திறமைகளை வளர்க்கும் சிறந்த தேர்வாக இருக்க முடியும்,” என SG TVET Group தலைமை நிர்வாக அதிகாரியுமான அவர் கூறினார்.
நிகழ்வில் மலேசிய மனிதவள அமைச்சின் தலைவர் டத்தோ அஸ்மான் முகமது யூசுப் கலந்து கொண்டு, SG TVET Group மற்றும் மனிதவள துறை (JTM) இணைந்து வேலைவாய்ப்பு அடிப்படையிலான தொழில் பயிற்சியை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoA) கையெழுத்திட்டனர்.
TVET குறித்த பாரம்பரிய பார்வை மாறி, இது வேலை வாய்ப்புகளையும், தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும் திறன் மேம்பாட்டுத் தளமாக மாறியுள்ளது.
“Siemens டிஜிட்டல் தொழில் பயிற்சி அகாடமி போன்ற சான்றிதழ் அடிப்படையிலான செயல்முறைகள், TVET மாணவர்களுக்கு வேலை சந்தையில் அதிக போட்டித்திறனை அளிக்கும்,” என கணேஸ் கூறினார்.
-யாழினி வீரா