Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

டாடா ஸ்டீல் செஸ்: முதல் சுற்றில் குகேஷ் வெற்றி

IMAGE: MID-DAY

நெதர்லாந்து, 20 ஜனவரி — டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் முதல் சுற்றில் உலக சாம்பியனும், இந்திய கிராண்ட்மாஸ்டருமான டி. குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் குகேஷ், நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியுடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய குகேஷ், 42-வது நகர்த்தலின்போது அனிஷ் கிரியை வீழ்த்தி முழு புள்ளியையும் பெற்றார். மற்றொரு போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.ஹரிகிருஷ்ணா, சக நாட்டு வீரரான அர்ஜுன் எரிகைசியைத் தோற்கடித்தார். இந்த சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசட்டோரவுடன் டிரா செய்தார்.

சாலஞ்சர்ஸ் பிரிவில் இந்திய செஸ் வீராங்கனை ஆர். வைஷாலி, அர்ஜெண்டினாவின் ஓரா பவுஸ்டினோவை வீழ்த்தினார். அதே நேரத்தில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையான நோடிர்பெக், இந்தியாவின் திவ்யா தேஷ்முக்கை சாய்த்தார்.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top