Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

3.4 மில்லியன் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல், நால்வர் கைது!

கோலாலம்பூர், அக் 28 – கேப்போங்கில் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையின் போது, வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்த குழுவை சுங்கத்துறையும் போலீஸும் இணைந்து சோதனை செய்ததில், மொத்தம் 3.4 மில்லியன் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்தச் சம்பவத்தில் 31 முதல் 44 வயதுக்குட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் தெரிவித்ததாவது, குற்றவாளிகள் பல வாகனங்களைப் பயன்படுத்தி இந்த சிகரெட்டுகளை விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தனர்.

சோதனையின் போது இரண்டு லாரிகள், மூன்று வான்கள் மற்றும் ஒரு தனியார் கார் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு மட்டும் சுமார் RM6.2 மில்லியன், வாகனங்களுடன் சேர்த்து மொத்த மதிப்பு RM9.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை சுங்கச் சட்டம் 1967 (பிரிவு 135(1)(d)) கீழ் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் தெரிவித்ததாவது, இத்தகைய சட்டவிரோத இறக்குமதி மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என கூறினர்.

-யாழினி வீரா

Scroll to Top