Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

“நண்பா” நிகழ்ச்சி – இந்திய இளைஞர்களுக்கான சமூக தளத்தில் ஒரு புதிய தொடக்கம்

படம்:ஊடகம்

கோலாலம்பூர், 22 ஜூன் : தகவல் அமைச்சின் கீழ் செயல்படும் சமூக தொடர்பு துறை (J-KOM) ஏற்பாடு செய்துள்ள “நண்பா” நிகழ்ச்சி, மலேசிய இந்திய இளைஞர்களுக்கான தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு முக்கியமான சமூக தளமாக திகழ்கிறது.

தமிழில் “நண்பன்” என்று பொருள்படும் “நண்பா” (NANBA) நிகழ்ச்சி, இந்திய சமூகம் மற்றும் அரசாங்கத்திற்கிடையிலான தகவல் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோள்களில், இந்திய இளைஞர்களுக்கு அரசு கொள்கைகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை தெளிவாக அறிமுகப்படுத்துவது, ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் சைபர் அச்சுறுத்தல்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை அடங்கும்.

வரும் ஜூன் 28-ஆம் திகதி காலை 9 மணிக்கு தகவல் மற்றும் தொடர்பு அமைச்சரான YB டத்தோ ஃபாஹ்மி படில் அவர்கள் திறந்து வைக்க இந்த நிகழ்ச்சி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஐடபிள்யூ.டி எகோ பூங்காவில் உள்ள பமர்பவ் மண்டபத்தில் நடைபெறும் .

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக விளக்க கூட்டங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவங்களின் கண்காட்சிகள், சிறுவர் வண்ணப்படப் போட்டி, McDonald’s உடன் பொழுதுபோக்கு, அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் ரஹ்மா விற்பனை விழா ஆகியவை இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சி, அரசாங்க திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து மக்களுக்கு நேரடியாக விளக்கங்கள் அளித்து, நவீன தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஊக்கமும் தருகிறது. சமூக நலனுக்காக இந்திய இளைஞர்களை உள்ளடக்கிய இத்தகைய நிகழ்வுகள், மலேசியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும்.

Scroll to Top