
கோலாலம்பூர், 6 ஏப்ரல்: இன்று ஒரு மனமகிழ்வான அனுபவமாக, உண்மையான தமிழ் பாரம்பரிய வாழைஇலை சாப்பாட்டை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது என டத்தோ டி. மோகன் தெரிவித்தார். திரு எஸ்.பி. மணிவாசகம் அவர்களின் ஏற்பாட்டில் மலர்ந்த இந்த நிகழ்வு, சுவையான உணவும், இனிய இசையையும் ஒருசேரக் கொண்டிருந்தது. ஆனால் இது வெறும் உணவுவிழாவாக இல்லாமல், சமூக நலனுக்கான நிதி திரட்டும் உயர்ந்த நோக்கத்துடன் நடைபெற்றதையும் டத்தோ மோகன் புகழ்ந்தார்.

“இத்தகைய சமூகப் பயனுள்ள நிகழ்வுகளை நாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்,” என்று அவர் உறுதியுடன் கூறினார்.
விழாவில் கலந்துகொண்டவர்களின் மனதையும், சுவையும் கவர்ந்த இந்நிகழ்வு, தமிழர் மரபை மெருகேற்றி, சமூக நலத்தையும் முன்னிறுத்திய சிறந்த முயற்சியாக அமைந்தது.
-யாழினி வீரா