
தீபாவளி திருநாளை முன்னிட்டு, அன்பும் பரிவும் நிறைந்த ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சி பிரிக்க்பீல்ட்ஸ், கோலாலம்பூரில் உள்ள New Master Bakeryயில் நடைபெற்றது.
இந்த மனிதநேய நிகழ்ச்சியை டத்தோ AK மற்றும் மிஸ்டர் காஃபூர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். சமூகத்திற்கான அக்கறையுடனும், தன்னலமற்ற எண்ணத்துடனும் அவர்கள் இவ்வாண்டு தீபாவளி விழாவை அன்பு இல்லக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் சுமார் 20 குழந்தைகள் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தனர். வண்ணமயமான அலங்காரங்களால் ஒளிர்ந்த பேக்கரியில் குழந்தைகளுக்காக சிறப்பு உணவுகள், இனிப்புகள் மற்றும் கேக் வழங்கப்பட்டன. அவர்களின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சி நிகழ்வின் உண்மையான பொருளை வெளிப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் “மக்கள் கலைஞர்” கவிமாறன் அவர்களும் விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைகளுடன் உரையாடி, அவர்களுக்கு வாழ்த்துகள் கூறினார். அவரது வருகை நிகழ்வுக்கு மேலும் உயிரூட்டியது.
அன்பு இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளின் வாழ்வில் சிறு புன்னகையாவது கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன், டத்தோ AK மற்றும் மிஸ்டர் காஃபூர் இருவரும் இனிகல்வை ஏற்பாடு செய்ததாக தெரிவித்தினர்.
“தீபாவளி என்பது ஒளியின் திருநாளாக மட்டுமல்ல, மனதின் ஒளியை மற்றவர்களோடு பகிர்வதற்கான நாள்” என டத்தோ AK தெரிவித்தார்.
அன்பு கலந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சமூக பொறுப்பை நினைவூட்டும் ஒரு நல்வழிக் காட்டாக அமைந்தது.
– யாழினி வீரா



