
கோலாலம்பூர், 11 மார்ச் — சுயேட்சை மத போதகர் ஜம்ரி வினோத்துடன் மத விவாதத்தை நடத்தும் திட்டத்தை ரத்து செய்ததற்காக, ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணனுக்கு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
டத்தோ சரவணன் இந்த முடிவை, அமைச்சரின் ஆலோசனையும், காவல்துறையின் அறிவுறுத்தல்களையும் கருத்தில் கொண்டு எடுத்துள்ளார். “மத விவாதத்தை தொடராதிருப்பது சரியான முடிவு. இது நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாக்கும் ஒரு பொறுப்பான முடிவாகும்,” என்று ஏரன் கூறினார்.
ஏரன் மேலும் “ஒற்றுமை என்பது வெறும் முழக்கமாக இருக்கக்கூடாது, அது அனைவரின் நடத்தை மற்றும் செயல்களில் பிரதிபலிக்க வேண்டும். பரஸ்பர புரிதல், மரியாதை, மற்றும் ஒப்புக்கொள்ளும் பண்பு மிகவும் முக்கியமானவை. இதைப் பின்பற்றுவதன் மூலம் சமாதானமான மற்றும் வளர்ச்சியடைந்த சமூகத்தை உருவாக்க முடியும்,” என்று கூறினார்.
இம்மாதிரியான முடிவுகள் எதிர்கால தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-வீரா இளங்கோவன்