Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

சன்ஷைன் கிட்ஸ் புதிய கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

படம்: ஊடகம்

கிள்ளான், நவ. 2 – குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இயங்கிவரும் சன்ஷைன் கிட்ஸ் நிறுவனம் தனது 8ஆம் கிளையை போத்தானிக் கிள்ளான் பகுதியில் திறந்து வைத்தது. சிறப்பாகவும் சிறப்புமிக்க வகையிலும் நடைபெற்ற இந்த திறப்பு விழா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறார்களின் பங்கேற்பால் நினைவாக அமைந்தது.

நிறுவனர் டாக்டர் ஷ்யாம்பிரசாத் ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரதமரின் சிறப்பு அலுவலர் துவான் சண்முகம் மூக்கன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், மற்றும் நெகிரி செம்பிலான் முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ ரவி ஆகியோர் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், மகிழ்ச்சியுடன் பங்கேற்ற மாணவர்களுக்கும் டாக்டர் ஷ்யாம்பிரசாத் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

மேலும், சன்ஷைன் கிட்ஸ் தனது ‘Open Day’ நிகழ்வை வரும் நவம்பர் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை நடத்த இருப்பதாகவும், புதிய சேர்க்கைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் சிரிப்புகள் நிறைந்த இந்த நாள், குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கான அழகிய தளமாக சன்ஷைன் கிட்ஸ் திகழ்வதை மீண்டும் நிரூபித்தது. 🌞

-யாழினி வீரா

Scroll to Top