Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

மலாக்கா மாசாப் எஸ்டேட் ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா டிசம்பர் 19 முதல் 21 வரை!

மலாக்கா, 3 நவ. – 146 ஆண்டுகள் பழமை வாய்ந்த மெலாக்கா மாசாப் எஸ்டேட் ஸ்ரீ மகா கருமாரியம்மன் மற்றும் பதினெட்டாம் படி கருப்பர் ஆலயத்தின் வருடாந்திர தீமிதி திருவிழா வரும் டிசம்பர் 19, 20 மற்றும் 21 ஆகிய மூன்று நாட்களில் மிகுந்த பக்தி பூர்வமாக நடைபெற உள்ளது.

ஆலய நிர்வாகக் குழுவினரின் தகவலின்படி, இந்த ஆண்டு திருவிழா மஹா யாக பூஜைகள், ஊர்வலம், கருப்பர் அருள்விழா மற்றும் தீமிதி வழிபாடு உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளுடன் நடைபெற உள்ளது. மூன்று நாட்களும் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தினர், இவ்விழாவை ஒற்றுமையின் அடையாளமாகக் கருதி பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். ஆலயத்திற்கான விரிவான தகவல்களை நேரடியாக ஆலய நிர்வாகத்தை நாடி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புனித விழாவுக்கான சிறப்பு காணொளி விரைவில் வெளியிடப்பட உள்ளதாக ஆலயத்தினர் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top